விளாத்திகுளம் அருகே அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேகம் : நூற்றுக்கணக்கானோர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராஜாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅய்யனார், விநாயகர், கருப்பசாமிகோவிலில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது சுவாமிகளுக்கு முதன்முதலாக உருவ வழிபாடு முறைப்படி, புதிய கற்சிலைகள் நிறுவப்பட்டு, பணிகள் அனைத்தும் முடிவடைந்தைத் தொடர்ந்து, இன்று இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை 8 மணியளவில் கோவிலில் யாகசாலை வளர்க்கப்பட்டு நாடிசந்தனம், மஹா பூர்ணாஹீதி, யாகசாலை ப்ரவோஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து காலை 11 மணியளவில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் ஸ்ரீ அய்யனார், கருப்பசாமி மற்றும் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பால், சந்தனம், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோவிலின் மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் பங்கேற்று உணவருந்திச்சென்றனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக