பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் மீசல் என்ற கிராமத்தில் மது, போதை பொருட்கள் உபயோக முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் என்ற கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மது, போதை பொருட்களை பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர்கள், ஆண்கள் என யாரும் மது அருந்தவோ, புகையிலை பயன்படுத்தவோ கூடாது என கிராம கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், மீசல் கிராமத்தில் மது அருந்துபவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவோர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை அவ்வப்பொழுது எழுவதாகவும், இதனால் பெண்கள் அச்சமடைந்து தங்களது வீட்டை விட்டு சுதந்திரமாக வெளியே வந்து வெளியூர் செல்வதை தவிர்த்தும், நிம்மதி இன்றியும் இருந்து வந்தனர். இந்த நிலையில், இதன் காரணமாக கிராமத்தில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக கிராம ஊர் கூட்டத்தில் மது அருந்துபவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் வெளியூர் சென்று பயன்படுத்த வேண்டும் மாறாக கிராமத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் கிராமத்தின் நடவடிக்கைகளுக்கும் அதுமட்டுமின்றி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை செய்வதற்காக தீர்மானிக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் இந்த டீசல் கிராமமக்கள் பெற்று வருகின்றனர்....




உங்கள் கருத்தை பதிவிடுக