கனிமொழியின் இறுதிகட்ட தீவிர தேர்தல் பிரச்சாரம்!
நாளை மறுதினம் (19.04.2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, இன்று(17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் விதமாக ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதையொட்டி, இன்று காலை திருச்செந்தூரில் கட்சியினருடன் பிரச்சாரத்தை துவங்கிய கனிமொழி, நாசரேத், ஏரல், புதுக்கோட்டை, கயத்தாறு, ஆலம்பட்டி விலக்கு, எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் தற்போது இறுதியாக தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்....




உங்கள் கருத்தை பதிவிடுக