Breaking News

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்து தருவேன்: விஜயசீலன் வாக்குறுதி!

  • Share on

L"வெள்ளையனே வெளியேறு இந்திய சுதந்திர  போராட்டத்தில்" ஈடுபட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம்  அமைத்து தருவேன்:  விஜயசீலன் வாக்குறுதி!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  விஜயசீலன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கருப்பூர்,கடலையூர், எட்டயபுரம், கீழஈரால், இளம்புவனம், சோழபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், வாக்கு சேகரிக்க வந்த விஜயசீலனுக்கு கடலையூர் கிராமத்தில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து கடலையூர்  கிராமத்தில் பேசிய வேட்பாளர் விஜயசீலன், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடலையூரைச் சேர்ந்த வெயிலுகந்த முதலியார் தலைமையில் 34 நெசவாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஆங்கிலேயர் துப்பாக்கிச் சூட்டிற்கு சங்கலிங்க முதலியார் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்கள் காயம் அடைந்தனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் நினைவாக கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி முன்பு 2008-ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ல் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் நினைவாக கடலையூர் 34 தியாகிகளுக்கும் மணிமண்டபம் அமைக்க வழிவகை செய்வேன், சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை  இப்பகுதிக்கு கொண்டு வந்து குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆன்மீக பிரிவு ராம்கி, மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், இந்திய செயலாளர் சரவணன், விளாத்திகுளம் துணை சேர்மன் சக்தி சுப்புலட்சுமி உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

கனிமொழி எத்தனை நாள் இங்கிருப்பார் என்று தெரியாது.." - விளாத்திகுளத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய சீலன் வாக்குச் சேகரிப்பு!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன்வாக்கு சேகரித்தார்.

  • Share on

Trending News