Breaking News

இலவசங்களை தேடி போகக் கூடாது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்திய சுயேச்சை வேட்பாளர்!

  • Share on

நான் வந்தால்... தூத்துக்குடியில் பெரிய "INCUBATION CENTER"‌ : நோட்டீஸ், பிரச்சாரம், வாக்குறுதிகன் என அனைத்திலும் தனித்துவம் - சுயேச்சையாக பலூனை கையிலெடுத்து களம் கானும் MBA பட்டதாரி இளைஞர்!


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில், திமுக, அதிமுக, நாதக, பாஜக கூட்டணி (தமாகா) உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரன் என்ற MBA(IIM) படித்த இளைஞரும் இந்த மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக பலூன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இந்த 2024 மக்கவைத் தேர்தலிலும் 3-வது முறையாக களம் காண்கிறார். இவர் தனது மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வது முதல் நோட்டீஸ் கொடுப்பது வரை அனைத்தையும் தன்னந்தனியாக ஒரே ஆளாக செய்து மற்ற கட்சி வேட்பாளர்களிடமிருந்து பொதுமக்களுக்கு வித்தியாசமாக காட்டுவதோடு மட்டுமின்றி, தனது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தில் கூட தனித்துவத்தை காட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறார்... 

இவரின் சுயவிபரங்களான பெயர், ஊர், கல்வித்தகுதி உள்ளிட்ட தகவல்களுடன் தொடங்கும் இவரது நோட்டீஸ் ஆனது மக்கள் நம்ப முடியாத, வியக்கக் கூடிய அளவிற்கு....

* பள்ளி மாணவர்களுக்கு ரூ.50,000 மதிப்புள்ள செல்போன் இலவசம்

• அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ரூ.1,00,000 மதிப்புள்ள இரு சக்கர வாகனம் இலவசம்.

• மாதம் ஒரு கேஸ் சிலிண்டர் இலவசம்

• ஆண்கள் மற்றும் வியாபாரிகள் தொழில் சார்ந்த போக்குவரத்திற்கு பேருந்து, ரயில், விமானத்தில் செல்ல இலவசம்

• 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதம் ரூ.5000 

-போன்ற நம்ப முடியாத வகையில் வாக்குறுதிகள் அளிப்பது போல கூறி நோட்டீஸ்-ன் பின்புறத்தில் ஒவ்வொரு வாக்குறுதிக்கும் தனி நிபந்தனைகள் விதிப்பது போல மக்கள் இலவசத்தை தேடி போகக் கூடாது என்பதை பொது மக்களுக்கு உணர்த்தியுள்ளார்..

மேலும், இவர் தன் வாக்குறுதிகளாக அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும், விவசாயிகள்-மீனவர்களின் நலம் காக்கப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் தனது பிரச்சாரத்திற்கு ஒரு கூட்டத்தையே கூட்டக்கூடிய சூழ்நிலையில், MBA பட்டதாரி சிவனேஸ்வரன் தனது பிரச்சாரத்திலும் தன்னந்தனியாக திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தூத்துக்குடி தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று விளாத்திகுளம் பகுதி மக்களுடைய பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சிவனேஸ்வரன், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் தனக்கு பலூன் சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், 


தூத்துக்குடியில் எந்தவொரு INCUBATION CENTER(புத்தாக்க வளர் மையங்கள்) கிடையாது. ஆனால், நான் வந்தால்.... தூத்துக்குடியில் பெரிய "INCUBATION CENTER" அமைக்கப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய அனைத்து வழிவகைகளும் செய்யப்படும்.

தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வாங்கிவிட்டால் நாம் அவர்களை எதுவும் கேட்க முடியாதே... இந்த தேர்தலில் பணம் வாங்காமல் இருந்து பாருங்கள்.

நீங்கள் என்ன ஆடு, மாடா உங்களுக்கு பணம் கொடுக்கிறதுக்கு,இந்த முறை புதிதாக ஓட்டு போடுங்கள்.. எனக்கு பலூன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டு பேருந்து நிலையம், கடைவீதிகள் போன்ற மக்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் தனது துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

திமுகவிற்கு பாஜக மறைமுகமாக ஆதரவு?

கனிமொழி எத்தனை நாள் இங்கிருப்பார் என்று தெரியாது.." - விளாத்திகுளத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய சீலன் வாக்குச் சேகரிப்பு!

  • Share on

Trending News