தமிழக முழுவதும்
வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்களது
வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்
இன்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்
சிவசாமி வேலுமணியை ஆதரித்து எட்டயபுரத்தில் நடிகை விந்தியா மற்றும் முன்னாள்
அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது
பொதுமக்களிடம் பேசிய நடிகை விந்தியா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் எம்.பி.
கனிமொழி, அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் வைகோ,
திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டரையும் கடும் விமர்சனம்
செய்து பேசினார்....
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா பொதுமக்களிடம் பேசியதாவது;நீங்க திமுகவுக்கு ஓட்டு போடுறதும்... குரங்குக்கு கோர்ட் போடுறதும் ஒன்னுதான்... சுத்த வேஸ்ட் உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய திருடனை கூட நம்பலாம்... ஆனால் திமுக காரணை நம்பக்கூடாது.திமுக ஒருவேளை ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தால்... திமுக 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுத்தால் சிலிண்டர் இருக்கும் ஆனா உள்ள கேஸ் இருக்காது,திமுக தேர்தலுக்கு முன்னாடி ஒன்னு பேசுவாங்க....தேர்தலுக்கு பின்னாடி ஒன்னு பேசுவாங்க..திமுக தேர்தல் சமயத்தில் ஓட்டை பத்தி மட்டுமே கவலைப்படுவாங்க... தேர்தல் முடிந்தவுடன் வீட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள்,வாரிசு அரசியலை எதிர்த்து, சேக்ஸ்பியர் - சிலப்பதிகாரம் வரை படித்து கரைத்துக் குடித்த வைகோ தற்போது தத்தி ஸ்டாலினிடம் கைகட்டி நிற்கிறார்..



உங்கள் கருத்தை பதிவிடுக