வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், தங்களது கட்சியின் கூட்டணிகளுக்கு வாக்கு சேகரித்து அணல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கனிமொழிக்கு ஆதரவாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகர் திமுக கட்சி அலுவலகத்தில் திமுக கட்சி ஒன்றிய செயலாளர், பேரூர் கழகச் செயலாளர்கள், வலைதள பொறுப்பாளர்கள், திமுக வார்டு உறுப்பினர்கள், உள்ளிட்ட நிர்வாகிகளுடன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன்,தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு,அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



உங்கள் கருத்தை பதிவிடுக