வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பொது இடங்களில் கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள், தேர்தல் விளம்பரம் செய்தல் போன்றவற்றில் தகுந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் திமுக கட்சி சார்ந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் தொடர்ந்து தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள், வருவாய் மற்றும் காவல் துறையினர் என யாரும் நடவடிக்கை எடுத்த பாடில்லை என்பதே பலரது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த உடனேயே தமிழக உட்பட அனைத்து மாநிலங்களிலும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிகள், சின்னங்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதில் தேர்தல் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனால், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை தேசிய நெடுஞ்சாலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுவர் விளம்பரங்கள் தற்போது வரை அழிக்கப்படாமல் இருந்து வருகிறது. அவ்வாறு எழுதப்பட்டிருக்கும் சுவர் விளம்பரத்தில் தமிழக முதல்வர், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோரின் பெயர்கள் அளிக்கப்படாமல் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறல்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதனை தேர்தல் அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் என யாருமே கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டம் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி, நாளை(26.03.2024) மாலை 4 மணியளவில் சிந்தலக்கரையில் 2 பாராளுமன்ற தொகுதிக்கு (தூத்துக்குடி, இராமநாதபுரம்) மாபெரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் அருகில் இருக்கக்கூடிய சாலையில் எழுதப்பட்டிருக்கும் இந்த சுவர் விளம்பரங்கள் அதிகாரிகள் எவரின் கண்ணிலும் படவில்லையா? அல்லது ஆளுங்கட்சி விளம்பரம் என்ற காரணத்தினால் பார்த்தும் பார்க்காதது போல் உள்ளனரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைகின்றது....
ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் (வேம்பார், சென்னமரெட்டியப்பட்டி) அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக முதல்வரின் தங்கை கனிமொழி போட்டியிடுவதால் வாகன சோதனைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது என்ற புகார்கள் எழுந்த நிலையில் தற்போது சுவர் விளம்பரங்கள் கூட அளிக்கப்படவில்லை என்றும், தற்போது வரை பறக்கும் படையினர் சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் எந்த பணமோ, பொருளோ கைப்பற்றப்படவில்லை என்பதும் தேர்தல் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனரா...? என்ற மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்குகின்றது.



உங்கள் கருத்தை பதிவிடுக