தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தலக்கரை கிராமத்தில் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி அன்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் பாராளுமன்ற திமுக வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர்களை ஆதரித்து திமுக கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த பரப்புரை கூட்டம் நடைபெறும் இடத்தில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள், ஒலி ஒளி அமைப்பு, இருக்கை வசதி, உணவு வசதி,பந்தல் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகரசெயலாளர் ஆனந்த சேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...



உங்கள் கருத்தை பதிவிடுக