Breaking News

எங்களுக்கு போட்டியாக மற்றவர்களை நாங்கள் கருதவில்லை- அமைச்சர் கண்ணப்பன் பேட்டி!

  • Share on

வரும் 26ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிந்தலக்கரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை  ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர், அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.பி. கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. அதேபோன்று ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்பி நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார்.  இரண்டு வேட்பாளர்களை ஆதரித்து,வரும் 26ந்தேதி மாலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.இந்த பொதுக்கூட்டத்திற்கு சுமார் 100ஏக்கர் பரபரப்பு அளவில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது..இந்த பணிகளை கனிமொழி எம்பி, தமிழக அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி இரு வேட்பாளர்களை ஆதரித்து ‌ எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திமுக சார்பில் 11 வேட்பாளர்கள் புதிதாக இந்த தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளனர் .ஏற்கனவே பணியாற்றிய திமுக எம்பிக்கள் மீது மக்கள் மத்தியில் எவ்வித அதிருப்தியும் இல்லை.எங்களுக்கு போட்டியாக மற்றவர்களை நாங்கள் கருதவில்லை என்றார்.

 

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

திமுகவினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது-கனிமொழி எம்பி!

முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற உள்ள பணிகளை எம்எல்ஏ மார்கண்டயேன் ஆய்வு செய்தார்.

  • Share on

Trending News