தூத்துக்குடி
நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி எம்பி வரும் நாடாளுமன்ற தேர்தலில்
மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
நடைபெற்றது.இதில் கனிமொழி எம்பி, சமூக நலன்
மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும்
திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற
தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி பேசுகையில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட
வாய்ப்பு தந்த முதல்வருக்கு நன்றி ,கடந்த 5 ஆண்டுகளாக தூத்துக்குடி தொகுதி இன்னொரு
தாய்வீடாக மாறி உள்ளது..சொந்த ஊர் சென்னையா - தூத்துக்குடியா என்று தெரியவில்லை -
அந்தளவு மக்களுடன் ஒருங்கிணைந்து விட்டேன்,தமிழகத்திற்கு எதிராக இருக்கும் ஒன்றிய பாஜக
அரசினை அகற்றுவது நமது கடமை வந்தாரை வாழ வைப்பது தமிழகம்... மற்ற
மாநிலத்திவரை மதிக்கும் பண்பாடு தமிழர்கள் பண்பாடு... அதற்கு காரணம் திமுக தான் ,கர்நாடக வில் உள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்படும்
வகையில் பாஜக ஒன்றிய அமைச்சர் ஒருவர் பேசி உள்ளார். அவர் மீது பாஜக என்ன நடவடிக்கை
எடுத்துள்ளது.கர்நாடகாவில்
காவல்துறையில் அண்ணாமலை பணிபுரிந்த போது தமிழகம் பிடிக்காது... கர்நாடகா என்
மாநிலம், கன்னடம் தான்
எனது மொழி என்று கூறினார் .தமிழகத்தில் சலுகைகள் பெற்று படித்து விட்டு, அங்கு போய்
நம்மைப் பற்றி குறை சொல்லி விட்டு இன்று அண்ணாமலை பாஜக மாநில தலைவராக சுற்றி
சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் மழை
வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது நமது பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை,
நிவாரண தொகை இதுவரை
தரவில்லை ஆனால் தமிழகத்தில் திரும்ப திரும்ப வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர்
நரேந்திர மோடி என்றும், திமுக, முதல்வர் மு.கஸ்டாலின், திராவிட மாடல்
ஆட்சியை கண்டு மற்றவர்கள் பயப்படும் நிலை உள்ளது .தமிழக மக்கள் ,தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் பாஜகவினர் ,குறிப்பாக ரெயில்வே துறையில் தமிழகத்தில்
இருந்து வைத்த கோரிக்கை. ஆனால் எதையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை ,மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு
காரணம் பாஜகவின் மத அரசியல் தான்,பாஜக ஆளும்
மாநிலங்களில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், அந்த நிலையை தமிழகத்தில் உருவாக்க பாஜக முயற்சி
செய்கிறது . அதற்கு இங்கு வாய்ப்பு இல்லை..நரேந்திர மோடி ஆட்சி கொண்டு வந்த
திட்டங்களை அனைத்தையும் நிறைவேற்றி விட்டு இன்று பாஜகவிடம் இருந்து பிரிந்து
விட்டதாக அதிமுக கூறுகிறது.அதிமுக, பாஜக இரண்டுமே
ஸ்டிக்கர் ஒட்டும் கட்சிகள்,அதிமுக, பாஜக இரண்டு பேருக்கும் வாய்ப்பு இல்லை என்று
உணர்த்த வேண்டும் என்றார்,முன்னதாக
அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் கூட்டணி கட்சியினர் தங்களது தலைவர்கள்
போட்டியிடுவதாக நினைத்து தேர்தலில்
பணியாற்ற வேண்டும் ,நம்மை
அழிந்துவிடுவோம் என்று பிரதமர் மோடி, பாஜகவினர் கூறி வருகின்றனர். தங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கமால் பாஜக,
திமுக கூட்டணியை திட்டி
வாக்கு கேட்கின்றனர்..ஆளுநர், ஒன்றிய
அமைச்சர்கள் என அனைவரும் திமுகவிற்கு இடைஞ்சல் கொடுக்கின்றனர்.இதை மீறி இண்டியா
கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் .கனிமொழி எம்பி வெற்றி உறுதி,
சர்வாதிகார ஆட்சியை
அகற்றி இந்தியாவை மீட்போம்,திமுகவினை எந்த
கொம்பனாலும் அழிக்க முடியாது. என்றார்.



உங்கள் கருத்தை பதிவிடுக