Breaking News

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்...

  • Share on

தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் செய்தித் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு தலைமையில், தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஏற்பாட்டில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர், இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர் மகேஷ்,தனபதி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரட்டை இலை தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அது எங்களுக்குத் தான் சொந்தம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேட்டி!

  • Share on

Trending News