"தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி குடியேறினாலும் பாஜகவிற்கு வாக்கு விழாது.கேள்வி கேட்டதற்காக தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி தருவது மட்டுமன்றி அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்தது வருகிறது ஒன்றிய அரசு - கனிமொழி எம்பி பேச்சு!
எல்லோரும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் , நாஞ்சில் சம்பத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நினைவு வெள்ளிவாள் பரிசாக வழங்கினார். அதேபோன்று கட்சித் தொண்டர்கள் ஆளுயர மாலைகளை இருவருக்கும் அணிவித்தனர்.
கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில் திமுக மக்கள் பணிகள், ஆட்சி சாதனைகளை எடுத்துக் கூறினால் அது முடிவுற்றதாக இருக்கும்.. கருணாநிதி ஆட்சியின் நீட்சியாக இருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஜி.எஸ்.டி வரி வசூல் தமிழக பங்கீட்டு தொகையை ஒன்றிய அரசு தருவதில்லை..பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மிரட்டி ஜி.எஸ்.டி வரி வசூல் செய்து விட்டு பங்கு தொகையை தருவதில்லை, வரி கேட்ட வெள்ளையரை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை போல ஒன்றிய அரசினை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து ஒன்றிய அரசினை மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து முதல்வர் கேள்வி கேட்டு வருகிறார்.கேள்வி கேட்டதற்காக தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்தது வருகிறது ஒன்றிய அரசு , ஒன்றிய அரசினை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார் முதல்வர் மு.கஸ்டாலின்.மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் மழை வெள்ளை சேதங்களை பார்த்த பின்னர் கோவில் வளாகம் சகதியை பற்றி கேள்வி கேட்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஏதும் கேட்கவில்லை.பிரதமர் நரேந்திர மோடி தற்போது தமிழகத்தில் தான் இருக்கிறார். தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி குடியேறினாலும் பாஜகவிற்கு வாக்கு விழாது.அரசு விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி , திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எவ்வித திட்டங்களை நிறைவேற்றவில்லை , நாங்கள் தான் நிறைவேற்றி வருகிறோம் என்றார். தூத்துக்குடி துறைமுகம் வெளிப்புற விரிவாக்க பணிகளுக்கு சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அது கிடப்பில் போடப்பட்டது.தற்போது தேர்தல் வரவுள்ள தால் தூத்துக்குடி மக்களை ஏமாற்ற நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்த ரூ.15 லட்சத்தை தரவில்லை, ஆனால் தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத் தொகையை வழங்கி விட்டார்..தமிழக அரசு அதிக நிதி கொடுக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.அதிமுக, பாஜக கட்சிகள் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டும் செய்து வருகின்றனர்.தமிழ் மொழி , தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசும் ஆளுநரை மத்திய அரசு தந்துள்ளது என்றார்.அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்
தமிழக முதல்வரின் சாதனைகளை அடுக்கி கொண்டே இருக்கலாம்.. எதிர்கட்சிகள் நமது சாதனையை மறைக்க பொய்களை கூறி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக கையெழுத்து போட்டனர். ஒரே நாடு ஒரே ரேஷன், உதய் மின் திட்டம், நீட் ஆகியவற்றை கொண்டு வந்தது ஒன்றிய அரசு அதற்கு ஆதரவு கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தான், இன்றைக்கு பிரிந்து விட்டது போல் அதிமுக நடிக்கிறது.திமுக கொண்டு வந்த திட்டங்களை ஒன்றிய அரசு திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார். பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டி விளம்பரபடுத்தி வருகிறது பாஜக என்றும்,, தமிழக அரசு ஒன்றிய அரசு நிதியை எதிர்பார்த்து இல்லை,மழை வெள்ளத்திற்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை..தூத்துக்குடிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த போது கனிமொழி எம்பி பெயரை கூறவில்லை அவ்வளவு பயம் என்றும்,தமிழகத்தினை வஞ்சிக்கும் அரசு ஒன்றிய அரசு,மீண்டும் மோடி ஆட்சி வந்து விடக்கூடாது..இந்தியா மற்றும் ஜனநாயகத்தினை காப்பற்ற வேண்டும் என்றால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை , புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தது திமுக என்றும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது..அந்த அவலை நிலையை நீக்கி தமிழகத்தில் இன்றைக்கு தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.திமுகவினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.. கூறியவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். தமிழகம், தமிழ் மொழி, தமிழக மக்கள் முன்னேற்றம் என்ற அடிப்படையில் தான் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது . எடப்பாடி பழனிச்சாமி மாதிரி அடி பணிந்து விடமால்,ஒன்றிய அரசு என்ன செய்தாலும் அடிபணிய மாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தி ஆட்சி புரிந்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட தலைவர் வாய்ப்பு தர வேண்டும் என்றார்
கூட்டத்தில் திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில் பன்முகத்தன்மை கொண்ட இந்திய துணை கண்டத்தினை அபாயம் சூழ்ந்து இருக்கிறது இந்தியாவை மீட்கும் குருச்சேத்திரம் வரும் நாடாளுமன்ற தேர்தல் என்றும், இந்தியா வாழத் தகுதியற்ற நாடாக ஆள தெரியாத பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார். பத்திரிக்கையாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது இல்லை, நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை..அதிபராக வேண்டும் என்ற நோக்கில் மக்களை பலி கொடுத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்றும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போதும் புறக்கணிக்கப்பட்டார்.தமிழகத்தை திட்டமிட்டு பழி வாங்குகிறார்.தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமருக்கு வெறுப்பு உள்ளது.ஏழை எளிய மக்கள் வாழும் நாட்டில் காஸ்ட்லியான பிரதமரை பார்க்க முடிகிறது..நேரு, கருணாநிதியை விமர்சனம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்று பண்பாடு பிரதமர் மோடிக்கு தெரியாதா? மழை வெள்ளத்தின் போது மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டனர்.. பறந்து சென்றனர்.டெல்லியில் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து மழை வெள்ளத்திற்கு நிதி கேட்டார்.அதே போன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு நிதி வழங்கவில்லைஇருந்த போதிலும் தமிழக அரசு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ6 ஆயிரம் நிவாரணம் வழங்கியது.தமிழக அரசு நிதிநிலை அறிக்கை மூலமாக இருளில் இருக்கும் மக்கள் வெளிச்சம் கிடைக்கும் என்றும் ,இன்றைக்கு ஜனநாயகம் ஊறுகாய் பானைக்குள் சென்று விட்டது.இண்டியா கூட்டணிக்கு அகரம் எழுதியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,இண்டியா கூட்டணி வெல்லும்.. அதற்கு வித்திட்டவர் மு.க.ஸ்டாலின் என்று உலகம் பறைச்சாற்றும்நரேந்திர மோடியின் வீழ்ச்சி மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது என்றார்.இந்த கூட்டத்தில் திமுக, மற்றும் காங்கிரஸ், மதிமுக ,விடுதலைச் சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்பி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென பிள்ளையார் நத்தம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் திடிரென மேடையின் முன் ஒலிபெருக்கிக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் எறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்த கட்சித் நிர்வாகிகள், காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்தினர். அவர் மது போதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



உங்கள் கருத்தை பதிவிடுக