Breaking News

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மெகா கோலப்போட்டி!

  • Share on

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில், பெண்களுக்கு மெகா கோலப் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் முகங்களை கோலங்களாக போட்டு அசத்தினர். இதைத்தொடர்ந்து இந்த மெகா கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, எல்.இ.டி டிவி, மிக்சி,  கிரைண்டர் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், மகேஷ், தனபதி,பால்ராஜ் மற்றும் ஏராளமான அதிமுகவினர் என பலர் கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

"எல்லோருக்கும் எல்லாம்" திமுக பாராளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டம்

மது போதையில் மின்கம்பத்தில் ஏறி தொண்டர் ரகளை- கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்ட கனிமொழி!

  • Share on

Trending News