Breaking News

கனிமொழி எம்.பி.-யிடம் ஒரே மேடையில் விவாதிக்க தயார்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பொது மக்கள் மற்றும் கட்சியினர் முன்னிலையில் சிறப்புரையாற்றினார். அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது; • போதைப்பொருள் நடமாடுவது மட்டுமின்றி போதைப்பொருள் கிடங்காக தமிழ்நாடு மாறி வருகிறது.. திமுக வந்தாலே தீவிரவாதம் வரும் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும்... ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தியவர் திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக், ஸ்டாலின் மற்றும் உதயநிதியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்... உதயநிதிக்கும், ஸ்டாலினுக்கும் போதை பொருள் கடத்தலில் பங்கு உண்டா?இதை நாங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் பிஜேபி படுத்துக்கொள்ளும்... மோடி பார்த்துக் கொள்வார்...• தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இந்த ஐந்தாண்டுகளில் என்ன சாதனை செய்துள்ளார் அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்... நாடாளுமன்ற உறுப்பினர் என்ன சாதனை செய்தார் என்று பட்டியல் போட்டு சொல்ல முடியுமா?• இந்த ஆட்சி வந்ததிலிருந்து எல்லாவற்றிற்கும் கருணாநிதி பெயரை மட்டும்தான் வைக்கிறார்கள்... நாம் அசந்து விட்டால் நமது வீட்டில் கூட கலைஞர் இல்லம் என எழுதி விடுவார்கள் என நகைப்புடன் கூறினார். இந்த ஆட்சியே ஒரு விளம்பர ஆட்சி... இந்த ஆட்சிக்கு மக்கள் படம் புகட்ட வேண்டும்...• கடந்த அதிமுக ஆட்சியில் தாமிரபரணி நதி - வைப்பார் நதி இணைப்பு திட்டத்திற்கு அரசாணை வெளியீட்டும் இந்த மூன்றாம் ஆட்சியில் நிறைவேற்றாதது ஏன்? இன்று தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வருபவரிடம் கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பொதுமக்களிடம் பேசினார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில், 100 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!

பாஜக ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி - கனிமொழி எம்பி பேச்சு!

  • Share on

Trending News