Breaking News

பாஜக ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி - கனிமொழி எம்பி பேச்சு!

  • Share on

பாஜக ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி -திரும்ப திரும்ப இங்கு வந்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள் - விளாத்திகுத்தில் கனிமொழி எம்பி பேச்சு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் திமுக மகளிரணி, மகளிரணி தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு தரப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி, பெண்கள் நலம், அவர்கள் உரிமைகளை நிறைவேற்றிய ஆட்சி பாஜக ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி,

பாஜக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்கி வருகிறது.

பொய்யை உண்மை போன்று பாஜகவினர் பேசுவர்.நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தாலும் சில சட்டங்களை போட்டு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி சீரமைப்புக்கு பின்னர் தான் இட ஒதுக்கீடு என்று கூறுவது பாஜகவினரை வெளிப்படுத்த

100நாள் வேலை திட்டத்திற்கு நிதியை  ஒன்றிய அரசு சரிவர ஒதுக்கீடு இல்லை,பிரதமர் மோடி வீட்டு திட்டத்தில் அதிகளவு பணம் தருவது தமிழக மாநில அரசு தான்.. இப்போது ஸ்டிக்கர் ஒட்டுவது யார்? என்று தெரியும்,

விவசாயிகளுக்கு எதிரான திட்டம்,  உதய் மின் திட்டம் ஆகியவற்றில் கையெழுத்து போட்டது அதிமுக,

உதய் மின் திட்டத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று கூறிய போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடியாது என்று கூறிவிட்டார்.

அதிமுக, பாஜக வாக்கு சேகரிக்க வரும் போது கேள்வி கேளுங்கள்,திரும்ப திரும்ப இங்கு வந்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

கேள்வி கேளுங்கள் காணாமல் போய்விடுவார்கள்,

மழை வெள்ளம்,, கொரோனா வந்த போது எங்கே இருந்தீர்கள் என்று கேள்வி கேளுங்கள்,எங்கள் மாநிலத்திற்கான நிதியை கொடுத்த பிறகு இங்கு வாருங்கள் என்று கூறுங்கள்.பெண்கள் இதையெல்லாம் ஒவ்வொரு வீடாக சென்று சொல்ல வேண்டும், மேலும் பேருந்தில் பயணிக்கும் போதும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

கனிமொழி எம்.பி.-யிடம் ஒரே மேடையில் விவாதிக்க தயார்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!

"எல்லோருக்கும் எல்லாம்" திமுக பாராளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டம்

  • Share on

Trending News