முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில், 100 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 100 பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் விழா விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பயனாளிகள் மற்றும் கட்சியினரிடம் சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து 100 பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் இயந்திரத்தை வழங்கினார். இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதி கணேசன் உட்பட மாவட்ட அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக