அயோத்தியில் வருகின்ற 22-ம் தேதி ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட "இராமர் கோவில் கும்பாபிஷேக விழா" மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் சார்பில், பொதுமக்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அட்சதை மற்றும் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கி விழாவிற்கு அழைப்பு விடுக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இளம்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வீடுவீடாக சென்றும், கடைகளிலும் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில், ஸ்ரீ ராமஜென்ம பூமி அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ராமஜென்ம பூமி அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கி கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக