தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம்
பேருந்து நிலையம் முன்பு, எட்டையாபுரம்
பாரதியார் கூட்டுறவு நூற்பாலை சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு நிரந்தர தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி
மூன்று ஆண்டுகள் முடிவு பெற்ற நிலையில், இன்னும் 12 மாதம் 6 தவணை, அறியர் தொகை அதை உடனே வழங்க வேண்டும்.
தீபாவளி அட்வான்ஸ் தொகை நிரந்தர தொழிலாளர்களுக்கு பத்தாயிரம்மும், NMR தொழிலாளர்களுக்கு 3000மும் முன்பணம் வழங்க வேண்டும். 2022ஆம் ஆண்டு வழங்கியபடி பொங்கல் பொருட்கள் குறையாமல் வழங்க வேண்டும். NMR தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் உயர்த்தி வரும் கூலி உயர்வை வழங்க வேண்டும், அரசு ஆணைப்படி குறைந்தபட்ச கூலி 512 நாள் ஒன்றுக்கு NMR தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.ஐடிஐ முடித்த எலக்ட்ரீசியன்களுக்கு வழங்குவது போல் ஐடிஐ பிட்டர்களுக்கும் சமமான சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பணிக்கொடையை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு இரண்டு வருடம் முடிந்தும் இதுவரை யூனிபார்ம் வழங்காமல் உள்ளது அதை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக