Breaking News

"விக்சித் பாரத் திட்டம்" நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Share on

"விஷன் விக்சித் பாரத் திட்டம்" எனும் நிகழ்ச்சியின் வாயிலாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மணியக்காரன்பட்டி   கிராமத்தில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. மிதிலேஷ் குமார் தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை, அஞ்சல் துறை என பல்வேறு துறைகளில் இருந்து ஏராளமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது துறையின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கிக்கூறி அவற்றில் பயன்பெறாத நபர்கள் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். மேலும், இதில் பேசிய உத்திரப்பிரதேச மாநில எம்.பி. மிதிலேஷ் குமார், விவசாயிகளுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு திட்டங்கள், சலுகைகள் குறித்து பேசினார். இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தமிழ்நாட்டிற்கு கலைஞர் மாநிலம் என்று மாநிலத்தின் பெயரையே மாற்றக்கூடிய நிலை கடம்பூர் ராஜு பேட்டி!

சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

  • Share on