Breaking News

அதிமுக சார்பில் வான வேடிக்கை ,இரவை பகலாக்கும் வகையில் சுமார் அரை மணி நேரம் பட்டாசு மற்றும் வான வேடிக்கை வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்!

  • Share on

அதிமுக கூட்டணியில் பிஜேபி இல்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்ததை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வான வேடிக்கை:  இரவை பகலாக்கும் வகையில் சுமார் அரை மணி நேரம் பட்டாசு மற்றும் வான வேடிக்கை வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம். அதிமுக கூட்டணியில் பிஜேபி இல்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்ததை தொடர்ந்து தமிழக முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவன் கோயில் தேரடி பகுதியில் அதிமுக கூட்டணி பிஜேபி இல்லை என அறிவித்ததை கொண்டாடும் வகையில் வான வேடிக்கை வெடித்து கொண்டாடினர். அப்போது இரவை பகலாக்கும் வகையில் சுமார் அரை மணி நேரம் வான வேடிக்கை வெடித்து மற்றும் பட்டாசு வெடித்து அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் தூத்துக்குடியில் அதிமுகவினர் கருவாடு மீன் ஆகாது பிஜேபி தமிழகத்துக்கு ஆகாது என நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தூத்துக்குடியில் புதிய அறங்காவலர் குழு தலைவர்கள் நியமனம்!

பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி முறிவை வரவேற்கும் துறை வைகோ!

  • Share on

Trending News