பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை அதிமுக முறித்ததை வரவேற்கிறோம் - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேட்டி .தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் முதன்மை பொது செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசுகையில் ஒன்றிய ரெயில்வே துறை சென்னை - நெல்லை வரை வந்தே பாரத் இயக்குவதாக அறிவித்த போது தென்தமிழக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் அது இயங்கும் வழித்தடம் அறிவிப்பு வந்த போது பொதுமக்கள் மற்றும் வைகோவிற்கு பெரும் ஏமாற்றம் தந்தது.அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை கடிதம் எழுதிய வைகோ, ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார் .வைகோ பணியாற்றிய போது கோவில்பட்டி வணிக நகரமாக உருவாகும் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்று தீர்க்கதரிசியாக யோசித்து 3 மேம்பாலங்களை கொண்டு வந்தார்.கொல்லம் அகலபாதை ரெயில் திட்டம் கொண்டு வர பாடுபட்டவர் வைகோ. 2015ல் தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து தோப்பூரில் அடிக்கல் நாட்டினார்.
ஆனால் தற்போது வரை அந்த திட்டம் நிறைவேறவில்லை. கோவில்பட்டி நகரில் வந்தே பாரத் நிற்க முதன் முதலில் குரல் எழுப்பி போராட்டத்தினை அறிவித்தது மதிமுக தான் .போராட்டம் அறிவித்தவுடன் ஒன்றிய இணை அமைச்சர் முருகன் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் வந்தே பாரத் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார். இது மதிமுகவின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த போராட்டம் , கோவில்பட்டி நகரம் வணிக நகரம் ,, கோவில்பட்டியை மையமாக கொண்டு மாவட்டம் உருவாகம் உள்ள நிலையில் ரெயில்வே புறக்கணிக்க கூடாது.வந்தே பாரத் நிற்கும் வரை தொடர்ந்து போராடும்.போராட்டத்தின் முடிவில் வந்தே பாரத் ரெயில் நிற்கும் என்ற அறிவிப்பு நிச்சயமாக வரும் - வெற்றியில் பங்குகொள்ள பலர் வருவார்கள் - அதைப்பற்றி நமக்கு கவலை,தமிழக வாழ்வாதரம் பாதிக்கப்படும் திட்டங்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் வைகோ, ஸ்டெர்லைட் முதல் நதிநீர் பிரச்சினை வரை என் தமிழகத்தின் உரிமையை காத்த வீரர் வைகோ,தேர்தல் அரசியலில் சொந்த மண்ணில் வைகோ தோல்வி அடைந்துள்ளார்- அது பணம் அரசியல்,தேர்தல் தோல்வியை கண்டு என்றும், வைகோ .பின்வாங்குவதில்லை,தமிழர் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கும் இயக்கம் தான் மதிமுக, மக்கள் பிரச்சினைகளுக்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.இதையடுத்து துரைவைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை அதிமுக முறித்ததை வரவேற்கிறோம்.அனைத்து திராவிட கட்சிகளும் இணைந்து தமிழகத்திலிருந்து மதவாத பாரதிய ஜனதா கட்சியை விரட்டுவோம், மதிமுக போராட்டம் அறிவித்த மறுநாளே ஒன்றிய இணையமைச்சர் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், இல்லை என்றால் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.



உங்கள் கருத்தை பதிவிடுக