Breaking News

நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் தமிழகத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் பெரும் பிரச்சினையாக நிலவி வரும் காவேரி தண்ணீர் பிரச்சனை இரு மாநிலங்களிலும், கர்நாடக மாநில முதல்வர்களின் உருவ பொம்மைகளை எரித்தும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கர்நாடகாவினர் நடத்தி வருகின்றனர். அதேபோல் உச்ச நீதிமன்ற காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட பின்பும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பொன் சத்யா தலைமையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும் தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காத திமுக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் , நாடாளுமன்ற பொறுப்பாளர் ராஜசேகர் மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி தூத்துக்குடி தொகுதி செயலாளர் மாரி சிவா ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி முறிவை வரவேற்கும் துறை வைகோ!

அஇஅதிமுக பூத் கமிட்டி விண்ணப்பம் நிரப்பும் பணிகள் தீவிரம்!

  • Share on