"அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும் : IPS-க்கு படித்திருந்தால் எவனையும் லத்தியால் அடித்து விட முடியாது" : - மிரட்டல் விடுத்த இடத்திலேயே ஒருமையில் பேசி பதிலடி கொடுத்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இன்று நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு விடுத்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "நீ ஜாதி, மத கலவரத்னதை உருவாக்க நினைக்கிறாய்", "அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்..IPS-க்கு படித்திருந்தால் எவனையும் லத்தியால் அடித்து விட முடியாது" என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண்...என் மக்கள்" பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விளாத்திகுளத்திற்கு வருகை தந்த அண்ணாமலை பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடம் பேசிய போது,[முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அந்தக் கட்சியில் (அதிமுக) இருந்தேன்...ஜெயலலிதா இறந்துவிட்டார்.. அவரை மோடிதான் கொன்றுவிட்டார்.. பிஜேபி-தான் கொன்றுவிட்டது] -என்று பகிரங்கமாக குற்றாட்டு வைத்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை.... ("அந்த எம்.எல்.ஏ-வை மறுபடியும் அந்த வார்த்தையை சொல்லுங்கனு சொல்றேன்.... சொல்லிப்பாருங்க... சொன்னா விளாத்திகுளத்துக்குள்ள காலை எடுத்து வைக்க முடியாது...."நானே personal-ஆ வரேன்..."என்று பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார்.)இந்த நிலையில் அண்ணாமலையின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அண்ணாமலை மிரட்டல் விடுத்த அதே பேருந்து நிலையம் முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தனக்கு மிரட்டல் விடுத்த அண்ணாமலையையும் பாஜகவினரையும் கடுமையாக தாக்கி பேசி குற்றச்சாட்டு வைத்திருப்பது திமுக-பாஜக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது;• அண்ணாமலைக்கு இன்று ஒரு 50 ஆயிரம் பேரை சேர்த்து பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.• விளக்கம் சொல்லாத விஷயம் வெற்றிகரமாக இருக்காது...* விளாத்திகுளம் எம்எல்ஏ விளாத்திகுளத்தில் கால் வைத்தால் காலை எடுப்பேன் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.. நான் இந்த இடத்தில் தான் இருக்கிறேன்.• நீ என்னுடைய இறக்கையை வெட்டினால் நான் ஓடிக்கொண்டிருப்பேன்... என் கால்களை வெட்டினால் ஊர்ந்து கொண்டிருப்பேன்.. ஒரு நாள் கூட முன்னுக்கு போவேனே தவிர பின்னுக்கு போக மாட்டேன்.• அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்... IPS-க்கு படித்திருந்தால் எவனையும் லத்தியால் அடித்து விட முடியாது.• உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்பதற்காக இத்தனை போலீஸ்காரர்கள், டிஎஸ்பிக்கள் இருப்பதனால் உங்களுக்கு மரியாதை கொடுத்து விட்டதாக அர்த்தமில்லை...* நீ ஜாதி கலவரத்தை உருவாக்க நினைக்கிறாய், மத கலவரத்தை உருவாக்க நினைக்கிறாய்...• ஜாதி, மதம் இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் 50 ஆண்டு காலம் ஏறக்குறைய 90% நாங்கள் நெருங்கி விட்டோம் இன்னும் 10% சதவீதம் இருக்கிறது, அதையும் நெருங்கி விடுவோம்.... ** நீ கலவரத்தை உண்டாக்க நினைப்பதற்காக நீ பேசுகிறாய்... கலவரம் வந்துவிடக்கூடாது, மக்கள் கொந்தளித்து உன்னை கல்லால் அடித்து விடக்கூடாது, யாரும் அண்ணாமலையின் நாக்கை பிடுங்கி விடக்கூடாது, கோபத்தில் யாரும் திமுக கட்சிக்காரன் ஏதாவது தவறுதலாக செய்துவிட்டால் தனிமனித தீண்டுதல் இருந்து விடக்கூடாது என்பதற்காக தடுப்பு வளையமாக இருப்பதற்கு தான் காவல்துறை இருக்கிறதே தவிர அது அண்ணாமலைக்கு கொடுத்திருக்கிற கௌரவம் அல்ல....• சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், தமிழக முதல்வரை காலினுடைய அழுக்குக்கு சமம் என்று நீ சொல்கிறாய்.. உனக்கு எல்லாம் அகற்ற வந்த பகலவன் தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.• அழுக்காக இருக்கிற நாங்கள் அழுக்காக இருந்தால் தான் நீ வெள்ளை சட்டை இப்படி போட்டுக்கிட்டு ஊர் ஊராக ஒன்றரை கோடி ரூபாய் ஏசி காரில் வந்து பிரச்சாரம் பண்ண முடியும்... நாங்க அழுக்கெல்லாம் போல இருந்தால் தம்பி அண்ணாமலை வெள்ளை சட்டை போட்டுகிட்டு கௌரவமாக வாழ முடியாது.• இந்த தமிழகம் பண்பட்ட பெரியார் மண்.. சனாதானம் தர்மம் அது எதிர்வினையாற்றுகிற விஷயம் சமத்துவம்... இதை யார் கூட பேசினாலும் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம் விளாத்திகுளத்தில் கூட அனைத்து கட்சிக்காரர்களும் வந்து கேட்கட்டும்.. அவரவர்கள் கருத்துக்களை சொல்லட்டும் எது சரியோ அதை மக்கள் மன்றமே பதில் சொல்லும்.** தம்பி அண்ணாமலை அவர்கள் நீங்கள் பக்குவத்தோடு நடந்து கொள்ள வேண்டும்... உங்களை விட நான் 10 வயது மூத்தவன்.. உங்களுக்கு அறிவுரை சொல்வதற்காக விரும்புகிறேன்.. எதற்காக என்று சொன்னால் நாடு முழுவதும் நாடு முழுவதும் உங்களுக்கு ஒரு கட்சியினுடைய எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒரு பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.• தனி மனிதனை ஒரு தமிழகத்தினுடைய முதலமைச்சரை கொச்சையாக பேசுவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்... என்று பேசினார்.



உங்கள் கருத்தை பதிவிடுக