Breaking News

பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!

  • Share on

பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்! 


தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளரின் நடவடிக்கைகள் மிகப்பெரிய பாதிப்பை எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது மிகப் பெரிய லஞ்ச ஊழலில் ஈடுபடுவதும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களை மரியாதை இன்றி நடந்து கொள்வதும் அவதூறாகவும் பேசுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது,பத்திரம் எழுத்தாளர்களின் பத்திர பதிவுகளில் பாரபட்சம் காட்டுவது முறைகேடாக பத்திரப்பதிவு செய்வது சரியான டாக்குமெண்ட் கொடுத்தும் பத்திரப்பதிவு செய்ய மறுப்பது என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது இதை கண்டித்து சார்பதிவாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டையாபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ் தலைமை தாங்கினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு. ரவீந்திரன் நிறைவு செய்து பேசினார் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர்கள்  செல்வகுமார்,கண்ணன்,பாலமுருகன் கிளைச்செயலாளர் சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை!

மாபெரும் எருது கட்டு விடும் விழா!

  • Share on