ஆழ்கடல் அலையோடு விளையாடி மனித உணவு சங்கிலியில் பாதி உணவுகளை தரும் மீனவர்களுக்கு: உலக மீனவர் தின வாழ்த்துக்கள்! கடல் உணவுகளை நாம் உண்ணுவதற்கு உயிரை பணயம் வைத்து கடலோடுபோராடிதான் இத் தொழிலில் ஈடுபடுகிறார்கள் நம் மீனவர்கள்,எதிர்பாராத சூழலில் இயற்கை சீற்றங்களில் உயிரையும் விட்டு விடுகிறார்கள் ,இலங்கை ராணுவத்தினர், அந்நிய நாட்டு மீனவர்கள் என தொடர் அச்சுறுத்தல் இருந்தாலும் மீன்பிடி தொழிலை மீனவர்களால் பழகிய தொழிலை விட முடியாது,மீனவர்களுக்கு எதிராகவே பல்வேறு சட்டங்களை புதிது புதிதாக கொண்டு வருகிறதுமத்திய அரசு கடல் சீற்றங்களுக்கு மத்தியில் எதிர்த்து படகை செலுத்துவது போல் தான் மீனவனின் வாழ்க்கையும் , வாழ்வாதாரமும் கடலை ரசிக்க தெரிந்த நமக்கு மீனவனையும் ரசிக்க பழகி கொள்வோம்,வலை விரிப்பு காணிகளுக்கு உலக மீனவர் தின வாழ்த்துகள்...
எழுத்தாளர் எஸ்.எம். ஏ . காந்திமதிநாதன்...




உங்கள் கருத்தை பதிவிடுக