தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிக மிக விசேஷம் ! உலகம் முழுவதும் இந்துக்கள் அனைவரும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாட உள்ளனர், குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால் ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களை அதை தட்டில் இருந்து இரு கைகளாலும் அள்ளி எடுப்பது மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாடை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அஅப்போது அளகாபுரி அரசே போற்றி என தொடங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளை சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை அள்ளி எடுப்பதும் மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும். தீபாவளி அன்று குபேர பகவானுக்கு செய்யயப்படும், இந்த நாணய வழிபாடு நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்தியம் செய்து தீபதூபம் காட்டி பூஜைகளை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை பிற்பகல் 1:00 மணி முதல் 2:00 மணி வரை அல்லது இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருகும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.
குபேர பகவான் அரிதாக சில கோவில்களில் தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பார்.சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்தினமங்கலத்தில் லட்சுமி குபேரருக்கு தனி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தீபாவளி பூஜை வெகு விசேஷம்.
தகவல்
சுப்பிரமணி ஐயர்
முத்துமாரியம்மன் கோவில்
கதிரேசன் கோவில் ரோடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி.




உங்கள் கருத்தை பதிவிடுக