Breaking News

UNHCR & ஊடகவியலாளர்கள் அகதிகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது!

  • Share on

தூத்துக்குடியில் UNHCR & ஊடகவியலாளர்கள் அகதிகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையரகத்தின் சார்பில், தூத்துக்குடி தனியார் விடுதியில் ஊடகவியலாளர்களுடன் அகதிகள் பற்றிய சிறப்பு கருத்து அரங்கம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி நடைபெற்றது. இதில் UNHCR அமைப்பின் மாநில அளவிலான அதிகாரிகள், அலுவலர்கள், மூத்த செய்தியாசிரியர்கள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த அகதிகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கில், ஊடகவியலாளர்களுக்கான அகதிகள் பற்றிய செய்தி அறிக்கை தயாரிப்பதற்கான குறிப்புகள், அகதிகள் வாழ்வியல் முறைகள், இன்னல்கள் & அவர்கள் தங்களது நாட்டிற்கு அனுப்பி வைகக்ப்படும் முறைகள், பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது. பின்னர் இந்த கருத்து அரங்கின் இறுதியாக இதில் கலந்து கொண்ட செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

பாலஸ்தீன இஸ்ரேல் நாடுகள் இடையே நடைபெற்றுவரும் போரை நிறுத்த கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குபேர பகவானுக்கு நாணய வழிபாடு !

  • Share on