தூத்துக்குடி
பாலஸ்தீனத்தின் மீது போர் நியதிகளை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான
பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் மீது குண்டு வீசி கொன்று குவிக்கும் இஸ்ரேலை
உடனடியாக தடுத்து நிறுத்தி இஸ்ரேலை போர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில்
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நிறுத்த கோரி விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமிய
ஜனநாயக பேரவை மற்றும் ஜனநாயக அமைப்பு சார்பில் பெண்கள் உள்ளிட்ட பங்கேற்ற கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீன இஸ்ரேல்
நாடுகள் இடையே கடந்த 20 நாட்களுக்கு
மேலாக போர் நடைபெற்று வருகிறது இந்த போரில் இஸ்ரேல் அத்துமீறி பாலஸ்தீனத்தில் போர்
நீதிகளை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தைகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றின்
மீது குண்டு வீசி கொடூரமாக பல்லாயிரக்கணக்கான கொன்று குவித்து வருகிறது இதற்கு
பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,
தூத்துக்குடியில் விடுதலை
சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட இஸ்லாமிய ஜனநாயக பேரவை மற்றும் ஜனநாயக அமைப்புகள்
ஒன்றிணைந்து தூத்துக்குடி மேட்டுப்பட்டி பள்ளிவாசல் அருகே போர் விதிகளை மீறி
செயல்படும் இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவித்துசர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மற்றும் ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள்
குழந்தைகள் ஆகியோர் பாலஸ்தீன கொடி மற்றும் பாலஸ்தீனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற
வாசகங்களை தலையில் கட்டிய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்




உங்கள் கருத்தை பதிவிடுக