ராதாபுரம் அருகே கையோடு கை சேர்த்து வாயோடு வாய் சேர்த்தவாறு,தம்பதியினர் பந்தை கடத்தும் புதுமையான விளையாட்டு!
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது சீலாத்திக்குளம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை ஒட்டி பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் சந்தன மாரியம்மன் கோவில் முன்பாக அமைந்துள்ள கலையரங்கு திடலில் இன்று மாலை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டை புதுமையான முறையில் அறிமுகப்படுத்தி அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருபவர்கள் இவ்வூரைச் சேர்ந்த விளையாட்டு போட்டி குழுவினர்.ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விளையாட்டை கண்டுபிடித்து நடத்தி வரும் போட்டி குழுவினர் இந்த ஆண்டு கண்டுபிடித்த விளையாட்டுப் போட்டி திருமணமான தம்பதியினரிடையே மிகவும் அமோக வரவேற்பு பெற்றது.
அதாவது திருமண தம்பதியினர் கையோடு கைசேர்த்து வாயோடு வாய் சேர்த்து பிளாஸ்டிக் பந்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது விளையாட்டு போட்டி விதிமுறையாகும். இதில் ஒரு பக்கத்தில் இருக்கின்ற பந்தை தம்பதியினர் இருவரும் கைகளால் எடுக்காமல் வாயோடு வாயாக எடுத்துக் கொண்டு கைகளை பின்னாடியும் அல்லது ஒருவருக்கொருவர் கோர்த்துக்கொண்டு வேகமாக சென்று எதிர்முனையில் பந்தை பத்திரமாக வைப்பது போட்டியின் விதியாகும். இது குழுவாகவும் தனித்தனியாகவும் நடைபெறும் இப்போட்டியில் அதிகமான பந்தை கடத்தி வெற்றி பெறும் தம்பதியினருக்கு பரிசாக மிகப்பெரிய அளவிலான கொப்பரை அண்டா போன்றவை பரிசாக வழங்கப்படும் என போட்டி குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியை ஆண்கள் இடுப்பில் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியை அறிமுகப்படுத்திய நிலையில் இந்த ஆண்டு இப்போட்டியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகவும் விளையாட்டுப் போட்டி குழுவினர் தெரிவித்தனர்.
பொதுவாக தமிழர்களிடையே பாரம்பரிய விளையாட்டுகளான முறுக்கு கடித்தல் வடம் கயிறு இழுத்தல் பாட்டிலில் நீர் நிரப்புதல் இசை நாற்காலி உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளையும் தாண்டி தற்போது சற்று வித்தியாசமாக இந்த மாதிரியான போட்டிகளை ராதாபுரம் பகுதி குறிப்பாக சீலாத்திகுளம் கிராம பொதுமக்களிடையே தற்போது அதிக வரவேற்பை பெற்று வருகிறது.




உங்கள் கருத்தை பதிவிடுக