நாகர்கோவிலில் மாநகராட்சி பொறியாளர் மீது கலெக்டரிடம் புகார் : ஓய்வு பெறவிருக்கும் கடைசி மாதத்தில் நாம் தமிழர் கட்சியினர் செய்த சம்பவம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் அரசுக்கு ரூ.11 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறி அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாங மனு அளித்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நாகர்கோவில் நகராட்சியாக இருக்கும் போதும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் பொறியாளராக செயல்பட்டு வருபவர் பாலசுப்ரமணியம். இவர் இந்த மாதம் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் மாநகராட்சியில் சுமார் 11. 59 கோடி ரூபாய் அளவில் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக தணிக்கை துறை வழங்கியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் மீதான மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ஏற்கனவே குற்றச்சாட்டு பதிவான நிலையில் அவர் அதற்கு உரிய விளக்கங்களை தற்போது வரை முறையாக அளிக்காததால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், அரசிடமிருந்து வழங்கப்படும் அவருக்குரிய பண பலன்களை வழங்கக் கூடாது எனவும் மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, சாதாரண மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தவில்லையெனில் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைக்கு செல்லும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பான அதிகாரி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர் இல்லையென்றால் தங்கள் கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறிச்சென்றுள்ளனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக