Breaking News

எட்டையபுரத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!

  • Share on

எட்டையபுரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ ஆகிய துறைகளின் மூலமாக விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு SMAY - 2023-2024 திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானிய விலையில் புதிய டிராக்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு துணை தலைவர் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எட்டையாபுரம் பாரதியார் முன்னாள் மில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஏற்பாடு!

விளாத்திகுளத்தில், திமுக கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா!

  • Share on