Breaking News

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் 500 பேருக்கு சுடச்சுட... பிரியாணி வழங்கி கொண்டாடிய அதிமுக நிர்வாகி ராஜகுமார்!

  • Share on

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு எட்டையபுரத்தில் பொதுமக்கள் 500 பேருக்கு சுடச்சுட... பிரியாணி வழங்கி கொண்டாடிய அதிமுக நிர்வாகி ராஜகுமார்!

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கழகக் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் பொதுமக்கள் 500 பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கி எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். இதில் எட்டையபுரம் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் உட்பட கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கழகப் பொதுச்செயலாளரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்...

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

"அக்னி நட்சத்திரம்" தொடங்கியுள்ள நிலையில், கொளுத்தும் வெயிலை தணிக்க குளுகுளு வென சர்பத், பதநீர், மோர்... விளாத்திகுளத்தில், பொதுமக்களுக்கு குடிங்க... குடிங்க... என கொடுத்த அமைச்சர் கீதாஜீவன்!

விளாத்திகுளம் தொகுதியில் திமுக 4822 வாக்குகளில் முன்னிலை!

  • Share on