விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரத்தின் இறுதி நொடி வரை கட்சியினர் வாக்குச்சேகரிப்பு!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதன்படி, விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் அருகில் இருந்து வாக்குச் சேகரிப்பை தொடங்கிய நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் விளாத்திகுளத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக சென்று அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், விளாத்திகுளம் நகரச் செயலாளர் மாரிமுத்து, ஜெயலலிதா பேரவை வரதராஜ பெருமாள், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், ஆனந்த், மகளிர் அணி ஒன்றிய தலைவி சாந்தி, பிரியா மற்றும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக