கனிமொழிக்காக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கடைசி நிமிட பிரச்சாரம்!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்காக விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் விளாத்திகுளம் பகுதி மக்களிடம் மீண்டும் கனிமொழியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் கடும் விமர்சனம் செய்து பேசி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு இறுதிகட்ட தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.



உங்கள் கருத்தை பதிவிடுக