Breaking News

MLA மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக & அதிமுக வினர்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும் மாவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான எல்லப்பன் மற்றும் மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விளாத்திகுளம் அம்பாள் நகர் திமுக கட்சி அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர், திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினரை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திமுக கட்சி வேஷ்டி அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி மற்றும் திமுக கட்சியினர் ஏராளமானோர் உடன் இருந்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாஜக மற்றும் அதிமுகவினர் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர்  திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

சாத்தான்குளம் பகுதிகளில் கனிமொழி தீவிரவாக்கு சேகரிப்பு!

  • Share on

Trending News