நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவுள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வரும் சூழலில், ஆளுங்கட்சியான திமுக சார்பிலும் தமிழக முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுடைய ஆலோசனை கூட்டங்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் என தொடங்கி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று "இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" என்ற பெயரில் திமுகவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்டப் அம்பாள் நகர் பகுதியில் இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வீடுவீடாக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி,வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி, வீடுகளின் வாசலில் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்", "பாசிசம் வீழட்டும்.... இந்தியா வெல்லட்டும்" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டி, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார், இந்நிகழ்வில் திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக