தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் நடைபெற்ற "மக்கள் களம்" நிகழ்ச்சியில், தாமதமாக வந்த காரணத்தினால் நீண்ட நேரமாக காத்திருந்த பொது மக்களிடம் இருட்டில் டார்ச் லைட் வெளிச்சத்தில் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கனிமொழி எம்.பி. சரியான நேரத்திற்கு வந்து விடுவார் என்பதால் மாலை வெளிச்சத்திலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி லைட் வசதிக்கு ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது
தற்போது தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் "மக்கள் களம்" என்ற மக்களின் குறைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் தூத்துக்குடி திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மக்கள் களம் நிகழ்ச்சியானது இன்று மாலை 4:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மாலை 3 மணிக்கெல்லாம் கிராம மக்களை அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்து விட்டனர். ஆனால் 4:30 மணிக்கு நிகழ்ச்சிக்கு வர வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மிக தாமதமாக மாலை 6 மணி அளவில் வந்து கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி என அனைவரும் வரிசையாக உரையாற்றி அங்கிருந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் முறையான மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்யாததால் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இருட்டில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவசர அவசரமாக பெற்றுக் கொண்டார். இருட்டில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியதன் காரணமாக அங்கிருந்த பொது மக்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்யாதது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறு என ஒரு தரப்பினர் கூறினாலும், கனிமொழி எம்.பி. தாமதமாக வந்தது தான் காரணம் என அங்கிருந்த பொதுமக்கள் முனுமுனுத்தவாறு சென்றனர்....



உங்கள் கருத்தை பதிவிடுக