எட்டையாபுரம் அருகே கோவில் திருவிழாவை ஒட்டி முளைப்பாரி ஊர்வலம் - அம்மன், ஸ்ரீஅய்யனார் விநாயகர்,சுவாமி திருவுருவத்துடன் அமைந்த முளைப்பாரிகள் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள அயன் ராஜாபட்டியில் அமைந்திருக்கும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் வைகாசி கொடை விழா கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆற்றில் கரகம், முளைப்பாரி ஊர்வலம் இன்று நடைபெற்றது. அம்மன், விநாயகர், கருப்பசாமி, ஸ்ரீ அய்யனார் உருவத்துடன் அமைந்த முளைப்பாரியுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி வைத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மேளதாளம் முழங்க ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது இதை எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்த முளைப்பாரி வைத்து பெண்கள் சிறுமிகள் கும்மி அடித்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக