Breaking News

திமுகவை கண்டித்து அஇஅதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்!

  • Share on

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் : திமுகவை கண்டித்து தூத்துக்குடியில் அஇஅதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்!


சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயத்தை அருந்தி 50க்கும் மேற்பட்டோர்   உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த சம்பவமானது  தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் திமுக அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,N. K.P.பெருமாள், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ் , விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, மற்றும்  தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக  கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

விளாத்திகுளம் இறுதி வாக்கு எண்ணிக்கை விபரங்கள்!

திமுகவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கிய நகர செயலாளர் ராஜகுமார்!

  • Share on