Breaking News

விளாத்திகுளம் மற்றும் புதூர் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

  • Share on

அதிமுக பொதுச்செயலாளரும்  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அதிமுகதினர்கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் மற்றும் புதூர் பேருந்து நிலையம் முன்பு நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நீர்,மோர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான  கடம்பூர் ராஜு திறந்து வைத்து, மோர் செவ்இளநீர், தர்ப்பூசணி, நொங்கு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், கிர்ணிபழம் உள்ளிட்டவற்றை  பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் NK.பெருமாள்,சின்னப்பன்,ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் முனியசக்தி ராமச்சந்திரன், சுசிலா தனஞ்ஜெயன், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றியசெயலாளர் மகேஷ்,தனபதி, பால்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பெருமாள் சாமி, மகளிர் அணி சாந்தி, பிரியா, அதிமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

முன்னாள் அமைச்சர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!

எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

  • Share on

Trending News