சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலையணிவித்து, மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் என பலர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஆ. சடையாண்டி, நகர செயலாளர் அழகு முனியசாமி, தொண்டரணி அமைப்பாளர் வில்லாளன் ரெஸ்லி,இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சண்முகராஜ், கிளைச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக