தமிழக மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று இன்று தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் விஜய சீலனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் பாஜக மற்றும் தமாகா கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய் சீலனுக்கு வாக்குகள் சேகரித்தனர். பிரச்சாரத்தின் போது த.மா.கா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது;
• வாக்களித்த மக்களைப் பற்றி சிந்தித்தால் டெல்லிக்கு சென்று அமைச்சரை சந்தித்து கௌரவம் பார்க்காமல் உங்களுக்கான திட்டத்தைச் சொல்லி தீர்வு ஏற்படுத்தலாம், ஆனால் திமுகவை பொறுத்த வரையிலே பாஜகவை எதிர்க்கட்சியாக நினைக்கவில்லை... எதிரிக்கட்சியாக நினைக்கிறார்கள்..
• டெல்லிக்கு சென்று அமைச்சர்களை சந்தித்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் பெற்றுத்தர முடியாது.. அதற்கு கௌரவம் பார்ப்பவர்கள்.
• பிரதமர் நரேந்திர மோடியோடு ஒத்த கருத்துடைய வேட்பாளருக்கு (விஜய சீலன்) சைக்கிள் சின்னத்தில் வாக்களியுங்கள்
• பிரதமர் யார் என்று சொல்லக்கூடிய தகுதி உள்ள கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி; பிரதமர் யார் என்று சொல்ல முடியாத தகுதியற்ற கூட்டணியாக இன்றைக்கு இந்தியா கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
• பிரதமர் பெயர் சொல்லாத கூட்டணி என்றால் தலை இல்லாமல் வால் மட்டும்
ஆடிக்கொண்டிருக்கிறது... அப்படிப்பட்ட ஆடிக்கொண்டிருக்கிற வாலை சரியாக நறுக்கக்கூடிய நாள் தேர்தல் நாள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
• டாஸ்மாக் கடைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது, போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டு போகிறது... இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாத அரசாக இந்த அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது.
• இந்த அரசை தட்டி எழுப்ப வேண்டும் என்றால் உங்களுடைய வாக்கை மாற்றி போடக்கூடிய நேரம் வந்திருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
• மத்திய அரசு கொடுத்த தொகை கூட நீங்கள் வெளிப்படைத்தன்மையோடு செலவழிக்கவில்லை என்பது தான் உண்மை நிலை.



உங்கள் கருத்தை பதிவிடுக