Breaking News

நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

  • Share on

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து  தமிழகத்தில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து தமிழக முழுவதும்  தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ள  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார், இதனை அடுத்த திமுகவினர், தமிழக முழுவதும் வீடு வீடாக மற்றும் தெருமுனை பிரச்சாரம் செய்து, 2021 முதல் தற்போது வரை திமுக அரசின் செய்த சாதனைகள் குறித்த தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம்  கிழக்கு ஒன்றிய திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், சூரங்குடி  கிராமத்தில் 27-02-2024 செவ்வாய்   கிழமை இரவு 7 மணியளவில் நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர்  சின்ன மாரிமுத்து  தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில், தலைமைக் கழக பேச்சாளர் சரவெடி சரத்பாலா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த புதிய நலத்திட்டங்கள், முதல்வரின் சாதனைகள், திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழக நகர செயலாளர்,சூரன்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல்த்தாய் சுப்பிரமணியன் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்...

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் - தேர்தல் பிரச்சாரம்!

  • Share on