தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த
பலத்த மழை காரணமாக கீழ ஈரால் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் மழை நீரில்
மூழ்கியதால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்குள்ள சேவை மைய கட்டிடத்தில்
அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாமில்
இருக்கும் மக்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி இணைச் செயலாளரும்
விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பன் உணவு வழங்கி
அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைச் செய்தார். மேலும், குடியிருப்புகளை சரி செய்ய உதவி தேவைப்படும்
மக்கள் தன்னை வந்து அணுகினால் கட்டாயம் உதவி செய்வதாகவும் தெரிவித்து, நிவாரண முகாமில் உள்ள குறைகள், தேவைகள் இருக்கிறதா? என்றும் பொதுமக்களிடம் கேட்டுச் சென்றுள்ளார்.



உங்கள் கருத்தை பதிவிடுக