Breaking News

தமிழக அரசை கண்டித்து பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக விளாத்திகுளம், புதூர், சூரங்குடி, குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள பல கிராமங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடபப்பட்டிருந்த மிளகாய், உளுந்து, பாசி, கம்பு, சோளம், மக்காச்சோளம், வெங்காயம் என அனைத்து விவசாயப்பயிர்களும் மழை வெள்ளத்தில் முற்றிலுமாக நாசமாகி உள்ளது. இந்த நிலையில் இன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த பாஜகவினர் 60-க்கும் மேற்பட்டோர் மாவட்ட விவசாயிகள் அனைத்து துணைத்தலைவர் மாரிமுத்து தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து இழப்பீடு மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது வரை சேதமடைந்த பயிர்களை பார்வையிட கூட வராத அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணனிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்திச் சென்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தெற்கு ஒன்றிய தலைவர் பார்த்திபன், விளாத்திகுளம் மற்றும் புதூர் பாஜக நிர்வாகிகள் பழனி முருகன், சுயம்புலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

400 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!

கீழ ஈரால் நிவாரண முகாமில், மக்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன்!

  • Share on

Trending News