Breaking News

400 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி., அரிசிப்பை, குடை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தொகுப்பை வழங்கினார். பின்னர் வெள்ள பாதிப்பில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களிடம், நிவாரண முகாம்களில் உணவு உள்ளிட்ட வசதிகள் சரியாக கிடைக்கிறதா? ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று கேட்டறிந்து.. மக்களுக்கு ஆறுதல் கூறி விரைவில் ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

தமிழக அரசை கண்டித்து பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்!

  • Share on

Trending News