Breaking News

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

  • Share on

விளாத்திகுளம் அருகே கீழஈரால்  கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில்,கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு மற்றும் அவைத்தலைவர் தர்மராஜ் சுவாமி, ஏற்பாட்டில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக காஞ்சி பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார் அதனை தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவந்தி,போடுசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

"எனக்கும் விதை கொடுங்கள் நானும் விவசாயி தான்" மானிய விதை கேட்ட எம்எல்ஏ மார்க்கண்டையன்!

பாஜக நிர்வாகிகள் 19 பேர் கைது - கொடிக்கம்பம் பறிமுதல் !

  • Share on

Trending News