விளாத்திகுளம் அருகே "எனக்கும் விதை கொடுங்கள் நானும் விவசாயி தான்" தமிழக முழுவதும் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம
சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில்
நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்கண்டேயன், அங்கு பொதுமக்கள்
மற்றும் விவசாயிகளுக்காக வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மானிய விலையில் வைக்கப்பட்டிருந்த தானிய
விதைகள் இடுபொருள்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்கண்டேயன் அதில் வைக்கப்பட்டிருந்த வெண்டைக்காய் மற்றும் சுரைக்காய் விதைகளை கையில் எடுத்துக் கொண்டு நானும்
விவசாயி தான் எனக்கும் விதைகளை தாருங்கள், இந்தக் காய்கறிகள் விளைந்த உடன்
உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன், எனது பெயர் ஜிவி
மார்கண்டேயன், எனது ஊர்
ராமச்சந்திராபுரம் என்று எழுதிக் கொள்ளுங்கள், என்று கூறி அங்குள்ள விதைகளை வாங்கிச்
சென்றார்.
அதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை
கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து தூய்மை
பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து அவர்களுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும்
பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.



உங்கள் கருத்தை பதிவிடுக