விளாத்திகுளம் அருகே "100 நாள் வேலை திட்டத்தில், நம்மளோட பங்கு பணம் கொடுத்தாச்சு...மத்திய அரசுதான் கொடுக்கல.." - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவஞானபுரம், பொம்மையாபுரம், நமச்சிவாயபுரம், அருங்குளம் மற்றும் வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின், "மக்கள் களம்" எனும் மக்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை மனுக்களை பெற்று பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசுகையில்,
கடந்த சில வாரங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பல்வேறு பகுதியில் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.. இதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நீதியும் சேர்த்து தான் ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வாரங்களாக மாநில அரசாகிய நம்மளுடைய பங்கை கொடுத்து விட்டோம் ஆனால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை.. இதனால்தான் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதே நிலைதான் என்றும் பொது மக்களிடம் கூறினார்.
நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,அரசு அதிகாரிகள், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் கட்சியை நிர்வாகி தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்



உங்கள் கருத்தை பதிவிடுக